
🔊To listen to this news in Tamil, Please select the text.
சைபர் ஜெயா நாசி கண்டார் உணவகத்திற்குச் சென்ற மூவர், உணவக ஊழியரிடம் தகராறு செய்து, அவரைக் கடுமையாகக் காயப்படுத்திய குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவன் கரண்டியைப் பயன்படுத்தாமல் உணவை வெறும் கையினால் எடுத்தபோது உணவக ஊழியர் அவரின் செய்கையைக் கண்டித்ததை அடுத்து, அந்த ஊழியர் தாக்கப்பட்டார்.
அதோடு உணவகத்தில் இருந்த உணவுத் தட்டுகளும் பாத்திரங்களும் சேதப்படுத்திய பின்னர், அந்த மூவரும் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.
போலீசாரின் தேடலில் 50லிருந்து 51 வயதுமிக்க அந்த மூவரும் கைது செய்யப்பட்டு விசாரணை தொடர்வதாக சிப்பாங் போலீஸ் தலைவர் Wan Kamarul Azran Wan Yusof (வான் கமாருல் அஸ்ரான் வான் யூசோப்) தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இருவருக்கு கிரிமினல், போதைப்பொருள் குற்றப் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.



