
🔊To listen to this news in Tamil, Please select the text.
பாசிர் சாலாக் அம்னோ தொகுதியின் தேர்தல் கூட்டம் பண்டார் பாரு ஃபெல்க்ரா செபெராங் பேராக் மண்டபத்தில் நடந்தபோது, அங்கு வந்த அத்தொகுதியின் முன்னாள் தலைவரும் அமைச்சராகவும் இருந்த டத்தோஸ்ரீ Tajuddin Abdul Rahman (தாஜுடின் அப்துல் ரஹ்மானை) மண்டபத்தினுல் நுழைவதிலிருந்து தடுத்து நிறுத்தப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து வாக்குவாதம் முற்றி, தாஜுடின் வெளியில் சென்று தமது வாகனத்தில் அமர்ந்திருந்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் தமது மகன் Faizal Tajuddin (ஃபைஸால் தஜுடின்) தலைவர் போட்டியிடுவதைக் காணவே வந்ததாகவும் தம்மைத் தடுத்து நிறுத்திய காரணம் கூறப்படவில்லை என்றும் அது தமக்கு இழைத்த பெரும் அவமரியாதை என்றும் தெரிவித்தார்.
மார்ச் 12ஆம் தேதி தாஜுடினின் புதல்வி Rahayu Tajuddin (ரஹாயு தாஜுடின்) தொகுதி மகளிர் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்தாண்டு அம்னோ, தாஹுடினை இடைநீக்கம் செய்து பொதுத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை. அதற்கு முன்னர் கடந்தாண்டு ஜூனில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதோடு ஜூலையில் இந்தோனேசியா- வுக்கான மலேசிய தூதர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



