
🔊To listen to this news in Tamil, Please select the text.
மோசடியாக பணம் பறிக்கும் அனைத்துலக நிலையிலான கும்பலைச் சேர்ந்த 4 பேர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, அவர்கள் சம்பந்தப்பட்ட சொத்துகளைப் பறிமுதல் செய்ய ஊழல் தடுப்பு ஆணையம் முயன்று வருகிறது.
வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் பினாங்கிலும் ஷா ஆலம் நீதிமன்றத்திலும் நான்கு பிரிட்டிஷ் பிரஜைகள் குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, எம்ஏசிசி அவர்களின் 20 கோடி சொத்துகளை அடையாளம் கண்டு பறிமுதல் செய்ய முனைந்துள்ளது.
இந்நிலையில் அந்த மோசடிக் கும்பலின் நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்த வங்கி அதிகாரிகள், கணக்காய்வாளர்கள், நிறுவன செயலாளர்கள் ஆகியோரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்- படுவதாகவும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் எம்ஏசிசி தெரிவித்துள்ளது.



