
🔊To listen to this news in Tamil, Please select the text.
வழக்கறிஞர் மன்றக் பொதுக்கூட்டத்தில் 9 ஆயிரம் பதிவுபெற்ற வழக்கறிஞர்களில் வெறும் 276 பேர் மட்டுமே கலந்து கொண்டது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
கூட்டத்தில் கலந்து கொள்ள குறைந்தபட்ச (கோரம்) 500 என்று இருக்கும்போது, அதனைக் கூட அடையமுடியாத நிலை ஏற்பட்டது பெரும் இழுக்கு என பிரபல வழக்கறிஞரான Siti Kasim (சித்தி காசிம்) தமது டெலிகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாத வழக்கறிஞர்கள் சோம்பேறிகள் என்றும் இவர்கள் சங்கத்தைப் பற்றிப் பேசவோ அல்லது குறைகூறவோ அருகதை அற்றவர்கள் என்றும் சித்தி காசிம் சாடினார்.
கோரம் கிடைக்காவிட்டாலும் விதிமுறைக்கு இணங்க, கூட்டம் பிற்பகல் 12.15 மணிக்குப் பின்னர் நடந்தது.



