31.8 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

மலாய்க்காரர்களை வலுப்படுத்தும் மகாதீரின் கூட்டம் இரண்டாவது முறையாக ரத்து

🔥 Views : 2
👁 Reading Now : 45
FILE PHOTO: Malaysia’s former Prime Minister Mahathir Mohamad speaks during an interview with Reuters in Kuala Lumpur, Malaysia, March 13, 2020. REUTERS/Lim Huey Teng/File Photo

🔊To listen to this news in Tamil, Please select the text.

மலாய்க்காரர்களை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டதாக அதன் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.
முதலில் அந்தக் கூட்டம் சைம் டார்பி மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடப்பதாக இருந்த நிலையில், எக்காரணமும் கூறப்படாமல் அது ரத்து செய்யப்பட்டது.
எனினும், அதனையடுத்து அது கோலாலம்பூர் கேஎல்சிசி ஹோட்டல் இம்பியானாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட பின்னர், நேற்று முன்தினம் இரவில் ரத்து செய்யப்பட்டது. அதற்கான காரணமும் அறிவிக்கப்படவில்லை.
அந்தக் கூட்டத்தில் துன் மகாதீர் ஒரு விருந்தினராக மட்டுமே கலந்து கொள்ள சம்மதித்திருந்தார் என்றும் சொல்லப்பட்டது.
மகாதீர் இரண்டாவது முறையாக பிரதமராக இருந்த காலத்தில், 2019இல் இதே மாதிரியான மலாய்க்காரர் பேராதிக்கத்தை நினைவுறுத்தும் கூட்டம் நடத்தப்பட்டபோது, அதில் கலந்து கொண்டு உரையாற்றியது பெரும் கண்டனத்துக்கு இலக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles