35.1 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

தடுப்புக் காவல் கைதி ஹேமநாதன் மரணம்! மேலும் ஒரு அதிர்ச்சி அலை

தடுப்புக்காவலில் ஹேமாநாதன் என்ற இளைஞர் மரணமடைந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாரூக் அப்துல்லா @ ஹேமாநாதன் என்ற 36 வயது இந்திய முஸ்லிம் இளைஞர் கிள்ளான் போலீஸ் காவலில் இன்று மாலை 3.30 மணிக்கு மரணம் அடைந்திருக்கிறார்.
நேற்று மாலை 5 மணி அளவில் கோலசிலாங்கூரில் எங்கள் இல்லத்தில் கணவர் ஹேமநாதன் கைது செய்யப்பட்டதாக உமைரா பிந்தி அப்துல்லா என்ற கண்ணகி தெரிவித்தார்.
இன்று காலை 10 மணிக்கு என்னை அழைத்த போலீசார் உணவு கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டனர்.
நானும் உணவை கொடுக்க போலீஸ் நிலையத்திற்கு சென்றேன்.
அங்கு வெகு நேரம் காத்திருந்தேன். மதியம் 3.30 மணிக்கு என் கணவர் காவலில் இறந்துவிட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக கண்ணகி தெரிவித்தார்.
போலீஸ் காவலில் என் கணவர் தப்பிக்க முயன்றதாக போலீசார் கூறினார்.
எங்களுக்கு
ஆறு மாதக் கைக்குழந்தை மற்றும் 4, 5 வயதில் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இப்போது மூன்று பிள்ளைகளும் தந்தையை இழந்து இருப்பதாக கண்ணகி வேதனையுடன் தெரிவித்தார்.
இதனிடையே மரணமுற்ற ஹேமநாதன் குடும்பத்தின் சார்பில் பிரபல வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் உதவ முன்வந்துள்ளார்.
ஹேமநாதன் மரணம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
காவல் கைதிகள் மரணமடையும் சம்பவம் ஒரு தொடர்கதையாக இருக்கிறது என்று வழக்கறிஞர் மனோகரன் மளையாளம் தெரிவித்தார்.
கடந்த 45 நாட்களில் காவல் கைதி கணபதி, சிவபாலன் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் மரணம் அடைந்தனர் இப்போது இந்த வரிசையில் ஹேமநாதன் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அவர் சொன்னார்.
இவரின் மரணத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வழக்கறிஞர் மனோகரன் வலியுறுத்தினார் மேலும், போலீசார் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கும் கண்ணகிக்கு ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் எல்லா உதவிகளும் வழங்குவேன் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles