27.6 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

கோவிட் -19 பரிசோதனைக்காக பினாங்கு அரசாங்கம் 30 லட்சம் ஒதுக்கீடு

🔥 Views : 9
👁 Reading Now : 42

பினாங்கு மக்களுக்கான கோவிட் – 19 பூர்வாங்க பரிசோதனையை மேற்கொள்வதற்காக மாநில அரசாங்கம் 30 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
நேற்று நடைபெற்ற மாநில அரசு கூட்டத்தில் ஏகமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜக்டீப் சிங் டியோ தெரிவித்தார்.
பினாங்கு மாநிலத்தில் 40 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.முதல் கட்டமாக ஒவ்வொரு தொகுதியிலும் 1,000 பேர் என மொத்தம் 40 ஆயிரம் பேர்,இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்படுவர்.
இதன் மூலம் தொற்று சம்பவங்கள் மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுக்க முடியும்.தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள முழு நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை முடிவுக்கு வந்த பிறகு,அடுத்த இரண்டு வாரத்தில் இந்த திட்டத்தை தொடங்கி அமல்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles