29 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

அமெரிக்காவின் இனவாத அரசியல்வாதி டிரம்ப்:கைதா அல்லது சரணா?

🔥 Views : 9
👁 Reading Now : 68

🔊To listen to this news in Tamil, Please select the text.

ஐக்கிய அமெரிக்காவின் 45-ஆவது அதிபராக 2017 முதல் 2021வரை வெள்ளை மாளிகையை ஆக்கிரமித்து இருந்தவர் டோனால்ட் ஜோன் டிரம்ப். இவர் அரசியல்வாதி மட்டுமல்ல; பத்திரிகியயாளர்-வர்த்தகப் புள்ளி என்னும் பரிமாணங்களையும் கொண்டவர்.

ஆனாலும், இவரின் அரசியல் இன அடிப்படைவாதத்தைக் கொண்டது. மியன்மார் ராணுவ ஆட்சியாளர்கள், இலங்கை ஆட்சியாளர்கள், இந்தியாவின் இன்றைய ஆட்சியாளர்கள், உள்ளூர் பாஸ் கட்சியைச் சேந்தவர்கள் ஆகியோரைப் போல இவரும் எப்பொழுதும் இனவாதம் பேசக் கூடியவர்.

ஆனாலும், தமிழர்களைப் போல கும்பிட்டு வணக்கம் தெரிவிக்கும் முறையை கொரோனா பருவம் கற்றுக் கொடுத்ததாக தனக்கேயுரிய வெடிச்சிரிப்புடன் இவர் சொன்னது குறிப்பிடத்தக்கது.

இதுவெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்:
டிரம்ப் தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் ஆபாசப் பட நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸ்-உடன் தொடர்பில் இருந்ததாகவும் 2016-இல் அதிபர் தேர்தலில் களமிறங்கியபோது இதை மறைப்பதற்காக ஸ்டோர்மிக்கு டிரம்ப் தன்னுடைய அந்நாளைய வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலம் இலட்சக் கணக்கான டாலர் கொடுத்ததாகவும் இப்பொழுது மெய்ப்பட்டுள்ளது.

டிரம்ப்மீது கிரிமினல் குற்றம் சாட்டுவதற்கு ஏதுவாக மான்ஹாட்டன் கிராண்ட் ஜூரி ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதனால், டிரம்ப் கைது செய்யப்படுவது உறுதி எனத் தெரிகிறது; இதைத் தவிர்க்க டிரம்ப் தானே முன்வந்து சரணடைவார் என்றும் சொல்லப்படுகிறது.

எது நடந்தாலும் வரும் வாரம் இதுகுறித்து தெரியவரும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles