27.9 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

ஆங்கிலத்தில் இரு சட்டத்திருத்த மசோதாக்கள்:எலியைப் புலியாக்கும் எதிரணி எம்பி-க்கள்

🔊To listen to this news in Tamil, Please select the text.

சட்டம்-நீதி தொடர்புடைய Penal Code மற்றும் குற்ற நடைமுறைச்சட்டம்-CPC தொடர்பாக இரு திருத்த மசோதாக்களை கடந்த வாரம் நாடாளு-மன்றத்தில் சட்டத்துறை துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங் முன்வைத்த-போது எதிரணி எம்பி-க்கள் கூச்சல் எழுப்பியதை, வெற்று அரசியல் நடவடிக்கை என்றும் எலியைப் புலியாக்கும் முயற்சி என்றும் சட்டமேதை ஷாட் சலீம் ஃபரூக்கி தெரிவித்துள்ளார்.

சுதந்திர மலேசியாவில் தேசிய மொழிச் சட்டம் உருவாவதற்கு முன், 1935, 1936ஆம் ஆண்டுகளிலேயே சம்பந்தப்பட்ட இரு சட்டங்களும் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், 1967 செப்டம்பர் மாதத்திற்குமுன் இயற்றப்-பட்ட சட்டங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதுடன், அவை இன்னமும் மலாய் மொழியில் மொழிமாற்றம் செய்யப்படவில்லை.

இவற்றை யெல்லாம் உணராமல் அல்லது மறைத்துக் கொண்டு, மலேசியாவை ஆங்கிலமயமாக்கும் முன்னெடுப்பு இது என்று எதிர்க்கட்சியினர் கூக்குரல் எழுப்புவதாக மலாயாப் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளருமான ஷாட் சலீம் ஃபரூக்கி தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles