28.8 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

ஒ.சி.ஐ. விண்ணப்பங்களை இந்திய அரசு எளிமையாக்க வேண்டும்- அமைச்சர் சிவகுமார் வேண்டுகோள்

🔊To listen to this news in Tamil, Please select the text.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு
இந்திய அரசு வழங்கும் ஓ.சி.ஐ. எனப்படும் அடையாள அட்டைக்கான (OCI ) விண்ணப்பத்தையும் நிபந்தனைகளையும்
எளிமையாக்கும்படி மனித வள அமைச்சர் வ. சிவகுமார் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாளியினர் இந்த சலுகையை பெறுவதற்கு ஏதுவாக இதற்கான விண்ணப்பம் எளிமைப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

ஓ.சி.ஐ. அடையாள அட்டைக்கான விண்ணப்ப பாரங்களில் உள்ள பல கேள்விகளை பூர்த்தி செய்ய முடியாத வகையில் உள்ளன. உரிய பதில் அளிக்க முடியாததால் அந்த அடையாள அட்டையைப் பெறுவதில் மலேசிய இந்தியர்கள் பல சிரமங்களை எதிர் நோக்குகின்றனர் என்று அவர் சொன்னார்..

பராவாசி மாநாட்டில் கலந்து கொண்டபோது இந்தியாவுக்கான வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரிடம் இது பற்றி விரிவாகப் பேசினேன். இன்னமும் மலேசிய இந்தியர்கள் தங்களது பூர்விகமாகக் கருதுகின்றனர். இந்தியா – மலேசிய இடையிலான உறவு காலத்தால் அழிக்க முடியாத தொப்புள் கொடி உறவாகும்.

தங்களது மூதையர்கள் இந்தியாவில் பிறந்ததால் தொப்புள் கொடி உறவு தொடர்ந்து நீடித்திருக்க மலேசிய இந்தியர்கள் இந்த ஒ.சி.ஐ. அடையாள அட்டைக்கு விண்ணப்பம் செய்கிறார்கள். இந்த அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் இந்தியா செல்வதற்கான வாழ்நாள் விசாவை பெறலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

மரியாதை நிமித்தமாக இந்தியாவுக்கு வருகை புரிந்திருக்கும் நான் இது தொடர்பில் இந்திய அரசு மற்றும் வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரிடம் மீண்டும் பேச்சுவார்த்தையை நடததி விண்ணப்பத்தை எளிமையாக்கும்படி கேட்டுக் கொள்வேன் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles