29 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

வெப்பக் காற்று பலூன் தீப்பற்றியதில் இருவர் மரணம்- மெக்சிகோவில் சம்பவம்

🔥 Views : 5
👁 Reading Now : 60

🔊To listen to this news in Tamil, Please select the text.

மெக்சிகோ நாட்டின் தியோதியுசான் நகரில் நேற்று வெப்பக் காற்று பலூன் திடீரென தீப்பற்றியதில் இருவர் உயிரிழந்ததோடு ஒரு சிறுவன் காயங்களுக்குள்ளானான்.
தீப்பிடித்த அந்த பலூனிலிருந்து தப்பும் நோக்கில் கீழே குதித்த போது ஒரு ஆடவரும் பெண்ணும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் உயிரிழந்த இருவரும் உள்நாட்டினராவர். இச்சம்பவத்தில் உடலில் தீக்காயங்கள் மற்றும் கை எலும்பு முறிவுக்கு ஆளான சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாரம்பரிய இடமான இந்த நகர் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பிரசித்திப் பெற்ற ஒரு தளமாகவும் விளங்குகிறது. இங்கு வரும் சுற்றுப்பயணிகள் வானிலிருந்து நகரின் அழகை காண வெப்பக் காற்று பலூனில் பயணிப்பது வழக்கமாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles