
🔊To listen to this news in Tamil, Please select the text.
பினாங்கு மாநில காவல் படைத் தலைவராக இதுவரை பொறுப்பு வகித்த ஷுஹைலி முகமட் ஜைன் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவராகப் பொறுப்புவகித்த அஸ்மி அபு காசிம், புக்கிட் அமான் நிருவாகப் பிரிவு இயக்குநராக நியமிக்கப்பட்ட நிலையில், அந்தப் பொருப்பு காலியாக இருந்து வந்தது. இந்த நிலையில், ஷுஹைலி அந்த இடத்தை நிர்ப்புவார்.
மற்ற மாநிலங்களுக்கான தலைமை மாற்றம் குறித்து, புக்கிட் அமான் போலீஸ் செயலாளர் விரைவில் அறிவிப்பு செய்வார் என்று உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் அறிவித்தார்
