
🔊To listen to this news in Tamil, Please select the text.
அண்மையில் பினாங்கிலிருது ஈப்போவிற்கு வந்து கொண்டிருந்த பேருந்தின் ஓட்டுநர், பயணத்தின்போது தமது கைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்த காட்சியின் வீடியோ பதிவு வைராலாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அதனையடுத்து அந்த நபர் செபெராங் பிறை தெங்கா போலீஸ் நிலையத்தில் சரணடைந்ததாகப் பினாங்கு போலீஸ் தலைவர் Mohd Suhaily Mohd Zain (முகமட் சுஹைலி முகமட் ஸின்) தெரிவித்தார்.
சிறுநீர் பரிசோதனையில் அந்த நபர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமக்கும் பேருந்து பயணிகளுக்கும் ஆபத்தை உருவாக்கும் விதத்தில் பேருந்தை இயக்கிய அவருக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது 6 மாதங்களுக்கு மேற்போகாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.



