
🔊To listen to this news in Tamil, Please select the text.
நாட்டில் ஆபத்தான 221 மலைச் சரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இயற்கை வளம், சுற்றுச்சூழல், பருவகால மாற்றத் துறை அமைச்சர் Nik Nazmi Nik Ahmad (நிக் நஸ்மி நிக் அமாட்) தெரிவித்தார்.
கடந்த டிசம்பரில் பத்தாங் காலி நிலச்சரிவில் 31 பேர் மரணமடைந்த நிகழ்ச்சியானது, அனைவரும் விழிப்பாக இருந்திருந்தால் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் புவியியல் வல்லுநர்களின் செவையைப் பாராட்டிய அவர், பொதுமக்கள் கூட்டாகச் செயல்பட்டால் ஆங்காங்கே நிகழும் நிலச்சரிவு சம்பவங்களைத் தடுக்கவும் அதிலிருந்து தப்பிக்கவும் முடியும் என அவர் தெரிவித்தார்.



