31.8 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

தடுப்புக் காவல் கைதி ஹேமநாதனுக்கு நீதி கிடைக்க வழக்கு தொடுக்கப்படும்!

🔥 Views : 12
👁 Reading Now : 24

தடுப்புக்காவலில் ஹேமாநாதன் என்ற இளைஞர் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் அவருக்கு நீதி கிடைக்க வழக்கு தொடுக்கப்படும் என்று பிரபல வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் தெரிவித்தார்.
இவரின் மரணத்திற்கு காரணமானவர் மீது மிக விரைவில் வழக்கு தொடுக்க அவரின் மனைவி கண்ணகி முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார.
பாரூக் அப்துல்லா @ ஹேமாநாதன் என்ற 36 வயது இந்திய முஸ்லிம் இளைஞர் கிள்ளான் போலீஸ் காவலில் நேற்று மரணம் அடைந்திருக்கிறார்.
எங்களுக்கு
ஆறு மாதக் கைக்குழந்தை மற்றும் 4, 5 வயதில் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இப்போது மூன்று பிள்ளைகளும் தந்தையை இழந்து இருப்பதாக கண்ணகி வேதனையுடன் தெரிவித்தார்.
இதனிடையே மரணமுற்ற ஹேமநாதன் குடும்பத்தின் சார்பில் பிரபல வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் ஆஜராகி இருக்கிறார்.
ஹேமநாதன் மரணம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
காவல் கைதிகள் மரணமடையும் சம்பவம் ஒரு தொடர்கதையாக இருக்கிறது .
கடந்த 45 நாட்களில் காவல் கைதி கணபதி, சிவபாலன் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் மரணம் அடைந்தனர் இப்போது இந்த வரிசையில் ஹேமநாதன் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அவர் சொன்னார்.
ஹேமநாதன் மரணத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அவரின் மனைவி கண்ணகி முடிவு செய்திருப்பதாக வழக்கறிஞர் மனோகரன் தெரிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles