
கழிவு நீரை பொது கால்வாயில் வெளியேற்றிய காரணத்தால் ரப்பர் கையுறைத் தொழிற்சாலை மூட சிலாங்கூர் மாநில சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது.
உலு லங்காட், பெரேனாங்கில் அந்த தொழிற்சாலை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்திலும் செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.
அந்த தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அத்தொழிற்சாலை நிர்வாகம் அமிலம் கலக்கப்பட்ட பொருள்களை கழுவி சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட நீரை சுத்திகரிக்காமல் அருகிலுள்ள கால்வாயில் கலக்க விட்டது கண்டு பிடிக்கப்பட்டதாக மாநில சுற்றுச் சூழல் துறை இயக்குநர் நோர் அஸியா ஜாபர் கூறினார்.
