
🔊To listen to this news in Tamil, Please select the text.
எஸ்ஆர்சி வழக்கில் நஜிப் ரசாக்கிற்கு தண்டனை விதித்த நீதிபதி Nazlan Ghazali (நஸ்லான் கஸாலி) சுயநல நோக்கோடு வழக்கை விசாரித்திருப்பதாக ஊழல் தடுப்பு ஆணையம் கண்டறிந்து குறிப்பிட்டுள்ளதாக சட்டம், நிறுவன சீராமைப்புத் துறை அமைச்சர் அஸாலினா ஒஸ்மான் குறிப்பிட்டுள்ளார்.
அவர் நீதிபதிகளின் தொழில் நெறிமுறையை மீறியுள்ளதாகவும் அவரின் வங்கிக் கணக்கில் விளக்கம் தர முடியாத வகையில் பெரிய தொகை ஒன்று வரவு வைக்கப்பட்டதாகவும் எம்ஏசிசி குறிப்பிட்டு, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அது பரிந்துரைத்துள்ளதாக நஜிப்பின் வழக்கறிஞர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போது அஸாலினா குறிப்பிட்டுள்ளார்.
எம்ஏசிசி ஆணையர் அஸாம் பாக்கி தலைமை நீதிபதி தெங்கு துன் மைமுன் துவான் மாட்டுக்கு நீதிபதி நஸ்லான் அனுப்பியுள்ள விசாரணை அறிக்கையில் அது பற்றிக் குறிப்பிட்டுள்ளதாகவும் அஸாலினா தெரிவித்தார்.
அந்த அறிக்கையைத் தலைமை நீதிபதி தெங்கு துன் மைமுன் துவான் மாட் நிராகரித்து, எம்ஏசிசி தனது அதிகாரத்திற்கு மீறி செயல்பட்டிருப்பதாகவும் அது தன்மூப்பாக நீதிபதி நஸ்லான் மீது விசாரணை செய்ததை கூட்டரசு நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அஸாம் பாக்கி தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ள அறிக்கை எப்படி வெளியானது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வழக்கில் நஜிப் ரசாக் குற்றம் எதுவும் செய்யாமலேயே தண்டிக்கப்பட்ண்டிருப்பதாக அம்னோ தலைவர்கள் நீதித் துறையைக் களங்கப்படுத்தி வருவது கவலையளிக்கின்றது.
