
🔊To listen to this news in Tamil, Please select the text.
தைவான் அரசாங்கத்தைக் கடுமையாக எச்சரிக்கும் விதமாக, தைவானை சுற்றி வளைக்கும் மூன்று நாள் ஒத்திகையை சீன ராணுவம் அதிரடியாக மேற்கொண்டுள்ளது.
சீனாவின் எதிர்ப்பையும் மீறி தைவான் அதிபர் சாய் இங் வென் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டதுடன் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்ததால் சீனா ஆத்திரத்தின் எல்லைக்கே சென்றுள்ளது.
தைவானிய அதிபர் சாய் இங்-வென் அமெரிக்காவுக்குப் பயணம் செய்து திரும்பிய சில மணி நேரத்திலேயே, தைவான் எல்லையில் போர் ஒத்திகையை சீனா தொடங்கியுள்ளது.
இந்த ஒத்திகையில், சீனாவின் 42 ராணுவ விமானங்களும் 8 கப்பல்களும் ஈடுபட்டுள்ளதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
