
🔊To listen to this news in Tamil, Please select the text.
சிறையில் இருக்கும் நஜிப் ரசாக்கிற்கு அரச மன்னிப்பு கிடைக்க அம்னோ முனைப்பு காட்டி வரும் வேளையில், அவருக்கு மன்னிப்பு வழங்கக் கூடாதென தொடக்கப்பட்ட கையெழுத்து இயக்கத்திற்கு 140,000 பேரும் மன்னிப்பு தரலாம் என்று தொடங்கப்பட்ட இயக்கத்திற்கு வெறும் 9,400 பேர் மட்டுமே சம்மதம் தெரிவித்துள்ளனர்.
நஜிப்பிற்கு மன்னிப்பு வழங்கக் கூடாதென பெர்சே தொடங்கிய பெட்டிஷனில் நஜிப், நாட்டிற்கு பெரும் அவப்பெயரைக் கொண்டு வந்துள்ளதால், பேரரசர் அவருக்கு மன்னிப்பைத் தரக்கூடாதென அது வலியுறுத்தியுள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் ஊழலை நாம் அனுமதிக்கக் கூடாதென்றும் அது குறிப்பிட்டுள்ளது.
அது மேலும் விவரிக்கும்போது, நஜிப்பிற்கு விதிக்கப்பட்ட தண்டனையானது மற்ற அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, நஜிப்பிற்கு அரச மன்னிப்பு தர வேண்டுமென்ற பெட்டிஷனுக்கு இது வரை 9,423 கையெழுத்துகள் மட்டுமே கிடைத்துள்ளதாகவும் அது தனது காரணத்தைக் கூறும்போது, நஜிப்பின் விசாரணையில் அவருக்கு நீதி கிடைக்கவில்லை, அவருக்கான அடிப்படை உரிமை மறுக்கப்பட்டதாகவும் நீதிமன்றம் அவரைத் தவறுதலாகத் தண்டித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
