26.4 C
Kuala Lumpur
Friday, July 3, 2026

Vetri

மன்னிப்பு வாரியத்தின் ஆலோசனையின் பேரில்தான் பேரரசர் முடிவெடுப்பார்

🔥 Views : 7
👁 Reading Now : 50

🔊To listen to this news in Tamil, Please select the text.

12 ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் நஜிப் ரசாக்கிற்கு பேரரசரின் அரச மன்னிப்பைப் பெற அம்னோ கடும்  முயற்சியை எடுத்து வருகிறது. 
நஜிப்பின் செல்வாக்கை வைத்து, பக்காத்தானுக்கு டாடா காட்டிவிட்டு, அது ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் திட்டத்தோடு  காய் நகர்த்தி வருகிறது.
இந்நிலையில், அது சம்பந்தமாகக் கருத்து தெரிவித்த பிரபல வழக்கறிஞர் Zainur Zakaria ஸைனுர் ஸக்காரியா, நஜிப்பிற்கு மன்னிப்பை வழங்க பேரரசர் தன்னிச்சையாக இயங்க முடியாது என்றும், பிரதமர் உட்பட பலரும் உறுப்பியம் பெற்றிருக்கும் மன்னிப்பு வாரியத்தின் ஆலோசனையின் பேரில்தான் பேரரசர் இதற்கான முடிவை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டார்.
பேரரசர் நீதிமன்றம் போல செயல்பட்டு கூட்டரசு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய முடியாது. மேலும்,  பேரரசர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியும் என்றும் அவர் பிரதமர், அமைச்சரவையின் ஆலோசனையைக் கேட்டு செயல்படத் தேவையில்லை என்று பிகேஆர் எம்பி ஹசான் கரிமின் கூற்றை அபத்தம் என ஸைனுர் ஸக்காரியா குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles