
🔊To listen to this news in Tamil, Please select the text.
பக்காத்தானுக்கும் தேசிய முன்னணிக்கும் இடையே நடைபெற்ற மாநிலத் தேர்தல் சம்பந்தமான பேச்சுவார்த்தையில் கருத்திணக்கம் ஏற்பட்டுள்ளதாக பிகேஆர் தலைமைச் செயலாளர் Saifuddin Nasution Ismail (சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில்) குறிப்பிட்டார்.
14ஆவது பொதுத்தேர்தலில் தொகுதியில் போட்டியிட்டு வென்ற கட்சியே 15ஆவது மாநிலத் தேர்தலில் அத்தொகுதியில் போட்டியிட ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மாநிலத் தேர்தலை நடத்த கெடா, பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கிளந்தான், திரெங்கானு ஆகிய மாநிலச் சட்டமன்றங்களை ஏக காலத்தில் கலைக்கவும் இணக்கம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
