
🔊To listen to this news in Tamil, Please select the text.
சீனாவுக்கும் பிரதேச நாடுகளுக்குமிடையே நிலவும் தென் சீனக் கடல் பிரதேச உரிமைக்கான பிரச்சினை இணக்கமான முறையில் தீர்த்துக் கொள்ளவே மலேசியா விரும்புவதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்தக் கடல் பிரதேசத்தில் பெட்ரோனாஸ் எண்ணெய் எடுப்பதை சீனா விரும்பாமல் அது பற்றித் தனது எதிர்ப்பை தெரிவித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பெட்ரோனால் மலேசிய கடல் பிரதேசத்தில் எண்ணெய் எடுக்கும் உரிமையை எக்காரணத்தைக் கொண்டும் யாரும் தடுக்க முடியாது என்றும் இந்த விவகாரத்தில் நாட்டின் இறையாண்மையை அரசு விட்டுக் கொடுக்காது என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
அது பற்றி சீனா கடுமையான எச்சரிக்கை விடுக்குமானால், அந்நாட்டோடு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அதில் அரசு முழுமையாக ஈடுபடும் என்றும் அன்வார் தெரிவித்தார்.
