
🔊To listen to this news in Tamil, Please select the text.
மற்ற மதங்களை விமர்சித்து இன துவேஷத்தையும் பிரிவினையையும் உருவாக்கும் விதத்தில் பேசியும் அறிக்கையையும் வெளியிட்ட பாஸ் கட்சித் தலைவர்கள் இருவர் மீதான விசாரணை தொடர்வதாக உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் மக்களவையில் தெரிவித்தார்.
ஜனவரி மாதம், பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் Muhammad Fawwaz Mohamad (முகமட் ஃபார்வாஸ் முகமட்) தமது முகநூல் அகப்பக்கத்தில், காஃபிர்கள் முஸ்லிம் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்வதாகக் குறிப்பிட்டிருந்தார்.
கடந்தாண்டு, பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், நாட்டில் நிலவும் ஊழல் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் அல்லாதவர்களே காரணம் என குறிப்பிட்டிருந்ததாக சைஃபுடின் தெரிவித்தார்.
அவ்விருவரின் மீதும் குற்றவியல் சட்டம், பல்லூடகச் சட்டம் ஆகியவற்றின் வழி விசாரணை நடைபெற்று வருவதாக சைஃபுடின் தெரிவித்தார்.
