
🔊To listen to this news in Tamil, Please select the text.
பெறப்பட்ட 150,000 குடியுரிமை விண்ணப்பங்களில், இவ்வாண்டு ஜனவரி முடிய 5,700 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.
இவ்வாண்டு குறைந்தது 10,000 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 2 மணிக்கு குடிநுழைவுத் துறையின் இணைய பக்கம் பொறுப்பற்ற நபர்களால் ஊடுருவல் செய்யப்பட்டு அதன் முகப்பு மாற்றப்பட்டதாகவும் ஆனால், அதன் தரவுகள் பாதிப்படையவில்லை என்றும் அதற்குக் காரணம் யாரென்று கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாகவும் சைஃபுடின் தெரிவித்தார்.


