
🔊To listen to this news in Tamil, Please select the text.
பொருள்களின் விலையைக் குறைக்க நடப்பில் இருக்கும் இடைத் தரகர்களின் செயல்பாடுகளைக் குறைக்க வேண்டுமென பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்.
புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் ரஹ்மான் திட்டத்தின் வழி காய்கறிகளும் மீன் வகைகளும் சந்தைக்குக் குறைவான விலையில் கிடைப்பதாக புத்ரா ஜெயாவில் ஏக்ரோ ரஹ்மா திட்டத்தைப் பார்வையிட்டபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டின் பல பகுதிகளின் பாசார் தானி மற்றும் ஏக்ரோ ரஹ்மா திட்டத்தையும் அமல்படுத்த அரசு தயாராக இருப்பதாகவும் அதன் மூலம் இடைத் தரகர்களின் ஊடுருவலைத் தவிர்க்க முடிவதோடு பொதுமக்கள் மலிவான விலையில் காய்கறிகளையும் மற்ற பொருள்களையும் பெற முடியும் என அவர் குறிப்பிட்டார்.


