26.4 C
Kuala Lumpur
Thursday, April 23, 2026

Vetri

முடி வெட்ட 120 ரிங்கிட்டா ? அதிருப்தியில் அந்நிய சுற்றுப் பயணிகள்

🔊To listen to this news in Tamil, Please select the text.

தலைநகர், புக்கிட் பிந்தாங்கில், செயல்படும் சிகை அலங்கார கடை ஒன்று தங்களுக்கு 120 ரிங்கிட்டை கட்டணமாக விதித்தது குறித்து, பிலிப்பீன்ஸ் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த தம்பதியர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். சாதாரணமாக முடி வெட்டும் சேவைக்காக தங்களுக்கு 120 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்பட்டது நியாயமா ? என, Zoe & Czar எனும் டிக் டாக் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள காணொளி வாயிலாக அவர்கள் மலேசியர்களிடம் கேள்வியை முன் வைத்துள்ளனர். புக்கிட் பிந்தாங்கில், அந்நிய நாட்டு ஆடவர் ஒருவரால் வழிநடத்தப்படும் அந்த சிகை அலங்காரக் கடைக்கு வெளியே முடி வெட்டுவதற்கு 19 ரிங்கிட்டிலிருந்து கட்டணம விதிக்கப்படுமென குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், பின்னர் தங்களுக்கு 120 ரிங்கிட் கட்டணமாக விதிக்கப்பட்டதாக அந்த சுற்றுப் பயணிகள் கூறியுள்ளனர். இவ்வேளையில், புக்கிட் பிந்தாங் பகுதியில் முடி வெட்டுவதற்கு அதிகபட்சம் 50 ரிங்கிட் மட்டுமே கட்டணமாக விதிக்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles