26.4 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியா சென்ற கொள்கலனில் ரி.ம 790 மில்லியன் போதைப் பொருள் பறிமுதல்

🔥 Views : 7
👁 Reading Now : 42

🔊To listen to this news in Tamil, Please select the text.

மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு 360 கிலோகிரேம் ஹரொய்ன் அனுப்பப்பட்டது தொடர்பில் புக்கிட் அமான் போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது. Queensland மாநிலத்தில் Brisbane நகரில் 790 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய போதைப்பொருளை மார்ச் 13ஆம் தேதியன்று ஆஸ்திரேலிய போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆஸ்திரேலியா கூட்டரசு போலீசாரிடமிருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக புக்கிட் அமான் போலீஸ் செயலாளர் Noosiah Saaduddin வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். மலேசியாவிலிருந்து சென்றடைந்த கொள்கலனில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அந்த போதைப் பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக இதற்கு முன் தகவல்கள் வெளியாகின. சிமெண்ட் தொகுதிகளுக்கு நடுவில் அந்த போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles