
மலேசியாவில் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் (Malik Streams) நிறுவனம் வெளியிடும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் 23ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்திற்கான முன்பதிவு டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் ஆர்வமுடன் டிக்கெட்டுகளை வாங்கி வருவதால், படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருவதாக விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரசியல் மற்றும் சமூக பின்னணியைக் கொண்ட இந்த திரைப்படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பம்சமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசிய ரசிகர்களுக்கு திரையரங்குகளில் விருந்தாக அமையும் இந்தப் படம், வெளியாகும் முதல் நாளிலேயே நல்ல வரவேற்பைப் பெறும் என திரையுலக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன



