26.4 C
Kuala Lumpur
Friday, July 3, 2026

Vetri

நாட்டின் செல்வத்தை தனிப்பட்ட நபர்கள் கொள்ளையடிப்பதை அனுமதிக்க முடியாது

🔥 Views : 9
👁 Reading Now : 58

🔊To listen to this news in Tamil, Please select the text.

லஞ்ச ஊழல் நடவடிக்கையிலிருந்து மலேசியாவை மீட்டெடுக்கும் முயற்சியிலிருந்து தாம் பின்வாங்ப்போவதில்லையென பிரதமர் டத்தோஸ்ரீ Anwar Ibrahim தெரிவித்துள்ளார். அதோடு நாட்டின் செல்வத்தை தனிப்பட்ட நபர்கள் கொள்ளையடிப்பதை தாம் அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவர் கூறினார். ஊழலை துடைத்தொழிக்கும் தமது முயற்சிக்காக என்னை வீழ்த்த விரும்பினால் தாராளமாக அந்த நடவடிக்கையில் ஈடுபடுங்கள் . ஆனால் நாட்டின் செல்வத்தை தனிப்பட்ட நபர்கள் களவாடுவதை முறியடிக்கும் முயற்சியில் தாம் தொடர்ந்து மேற்கொள்ளப்போவதாக Anwar சூளுரைத்தார். லஞ்ச ஊழலில் யார் சம்பந்தப்பட்டாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி ஊழல் தடுப்பு ஆணையத்தை தாம் பணித்திருப்பதாக நேற்று தம்புன் தொகுதியில் நோன்பு துறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோது அன்வார் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles