29 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

பாடாங் செட்டி பெயர் நிலைத்திருக்க வேண்டும்!

🔥 Views : 8
👁 Reading Now : 54

கிள்ளான் பாடாங் செட்டி பெயர் நிலைத்திருக்க வேண்டும். சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி இதை உறுதிப்படுத்த வேண்டுமென கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத் தலைவர் ராமநாதன் கேட்டுக்கொண்டார்.
நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பாடாங் செட்டி தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும். இது இந்தியர்களின் அடையாளச் சின்னமாக நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார் கடந்த ஒரு வாரமாக பாடாங் செட்டி பெயர் விவகாரம் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
சிலாங்கூர் மாநிலத்தில் இடம்பெற்றிருக்கும் ஆட்சிக்குழு உறுப்பினர், இந்தியர் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் பாடாங் செட்டி பெயர் நிலைத்திருக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருவது வரவேற்கக் கூடியது. இந்திய சமூகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்களும் ஒருசேர குரல் கொடுப்பதை நாங்கள் வரவேற்கிறோம் என்றார் அவர்…
நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று வர்ணிக்கப்படும் பாடாங் செட்டி பெயர் வரலாற்றிலும் ஆவணங்களிலும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles