25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

கொலம்பியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தாண்டியது

🔥 Views : 7
👁 Reading Now : 37

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் கொலம்பியா 12-வது இடத்தில் உள்ளது

இந்நிலையில், கொலம்பியாவில் ஒரே நாளில் 28,624 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதனால் அங்கு கொரோனா-வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 35 லட்சத்தை நெருங்குகிறது.

ஒரே நாளில் 545 பேர் பலியானதால் அந்நாட்டில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆயிரத்து 353 ஆக உள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து 32.42 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் 1.55 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles