30.1 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

450 வெள்ளியில் எப்படி குடும்பம் நடத்துவது? கண் பார்வையற்றோர் துயரும்!

To listen this news kin Tamil, Please click play button

நாட்டில் நோய்த்தொற்று தாக்கம் காரணமாக பொது முடக்கம் அமலுக்கு வந்திருக்கிறது. இதனால் கண் பார்வையற்றோர் நடத்தும் உடும்புபிடி நிலையங்கள் உட்பட கச்சான் வியாபாரம் செய்வதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று சிலாங்கூர் மாநில இந்தியர் கண் பார்வையற்றோர் சங்க தலைவர் வி. சரவணன் வேதனையோடு கூறினார்.
அரசாங்கம் வழங்கும் 450 வெளியில் எங்களால் எப்படி குடும்பம் நடத்த முடியும். எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. வீட்டுக்கு வாடகை பணத்தை செலுத்த வேண்டும். பொருட்களை வாங்க வேண்டும். ஆகவே நாங்கள் படும் துயரத்தை போக்க அரசாங்கமும் பொது இயக்கங்களும் உதவ முன்வர வேண்டும் என சரவணன் கேட்டுக்கொண்டார்.
நாங்கள் சிறுசிறு வியாபாரத்தை செய்து வந்தோம்.இன்று அந்த வியாபாரத்தை செய்ய முடியாமல் இருக்கிறோம். எங்களின் வருமானம் பாதிக்கப்பட்டு விட்டது. கண்பார்வையற்றோர் நடத்தும் உடம்பு எப்படி நிலையங்களுக்கும் அனுமதி இல்லை.
இந்நிலையில் நாங்கள் எப்படிதான் வாழ்வது என்று அவர் வேதனையுடன் கேள்வி எழுப்பினார்.
எங்களுக்கு உதவி செய்யு முன் வரும் அன்பர்கள் 011-11296758 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles