29 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

மீட்டும் ஒரு காவல் கைதி மரணமா? எப்போது முற்றுப்புள்ளி!

🔥 Views : 8
👁 Reading Now : 33
To listen this news kin Tamil, Please click play button

தடுப்புக் காவல் கைதிகள் மரணமடையும் சம்பவம் தொடர்வது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக சிலாங்கூர் மாநில இந்திய சமூக தலைவர் அமைப்புக் குழு தெரிவித்துள்ளது.
சுமார் 45 நாட்களில் தடுப்புக்காவல் கைதிகளான கணபதி, சிவபாலன், சுரேந்திரன், ஹேமாநாதன் ஆகியோர் மரணம் அடைந்துள்ளனர். தடுப்புக் காவல் கைதிகள் மரணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால்,இது ஒரு தொடர்கதையாகவே இருக்கிறது என்று இந்த அமைப்பின் தலைவர் ராஜேந்திரன் ராசப்பன் தெரிவித்தார்.
இதனிடையே. பாடாங் செட்டி விவகாரத்தில் பாடாங் செட்டி நிலைத்திருக்க ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ் குரல் கொடுத்துள்ளார்.
கிள்ளான் இந்தியர் நகராண்மைக் கழக உறுப்பினர்கள், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜோர்ஜ் குணராஜ், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ ஆகியோரும் பாடாங் செட்டி நிலைநிறுத்தப் போராடி வருவது பாராட்டுக்குரியது என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles