27.6 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

மழைக்காக ஒதுங்கியிருந்த மோட்டார் சைக்கிளோட்டிகள் மீது கார் மோதி மூவர் மரணம்

🔥 Views : 9
👁 Reading Now : 36

🔊To listen to this news in Tamil, Please select the text.

சைபர் ஜெயாவிற்கு அருகில் புதிய கிள்ளான் விரைவுச் சாலையில், மழைக்காக ஒதுங்கி இருந்த மோட்டார் சைக்கிளோட்டிகளின் மீது வேகமாக வந்த கார் ஒன்று மோதியதில், மூவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.
குடிபோதையில் காரோடிய சம்பவத்தில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாகவும், 26 வயதுடைய உள்ளூர் ஆடவன் ஹோண்டா காரை கட்டுப்படுத்த முடியாமல் மேம்பாலத்திற்குக் கீழ் ஒதுங்கியிருந்த மோட்டார் சைக்கிளோட்டிகளை மோதித் தள்ளியதாக நம்பப்படுகிறது.
விபத்தில் கொல்லப்பட்டவர்களோடு படுகாயம் அடைந்த மூன்று பேர் சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவத்திற்குக் காரணமான காரோட்டி கைது செய்யப்பட்டு குடிபோதையில் காரோட்டிய சட்டத்தின் வழி குற்றம் சாட்டப்படுவர் என பெட்டாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் Mohamad Fakhrudin Abdul Hamid (முகமட் ஃபாக்ருடின் அப்துல் ஹமிட்) தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles