28.5 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

Dataran Majlis Perbandaran Klang
பெயர் பலகைகள் அகற்றம்!

🔥 Views : 9
👁 Reading Now : 53
To listen this news kin Tamil, Please click play button

கிள்ளான் பாடாங் செட்டி பெயர் நிலைத்திருக்க வேண்டும் குரல் கொடுக்கப்பட்டு வரும் வேளையில் கிள்ளான் நகரில் பொருத்தப்பட்ட Dataran Majlis Perbandaran Klang பெயர் பலகைகள் இன்று அகற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பாடாங் செட்டி தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும். இது இந்தியர்களின் அடையாளச் சின்னமாக நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜோர்ஜ் குணராஜ் தெரிவித்தார்.


கடந்த வாரம் கிள்ளான் நகராண்மைக் கழகத் தலைவருடன் நடந்த சந்திப்பில் பாடாங் செட்டி பெயர் நிலைநிறுத்த வேண்டும் என்று நான் உட்பட கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ, இரு சட்டமன்ற உறுப்பினர் கள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் இந்திய கவுன்சிலர்கள் முறையிட்டோம்.
இந்த விவகாரம் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று கிள்ளான் நகரில் பொருத்தப்பட்ட Dataran Majlis Perbandaran Klang பெயர் பலகைகள் அகற்றப்பட்டதை வரவேற்பதாக டாக்டர் ஜோர்ஜ் குணராஜ் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles