29.5 C
Kuala Lumpur
Thursday, July 2, 2026

Vetri

நஜீப் விடுதலைக்காக குரலெழுப்புவதுபசப்பு வேலையா?

🔥 Views : 6
👁 Reading Now : 49

🔊To listen to this news in Tamil, Please select the text.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று அம்னோ உயர்மட்ட தலைவர்கள் தொடர்ந்து பேசிவருவது, கட்சியில் இருக்கும் நஜீப்பின் ஆதரவாளர்களை சமாதானப் ப்டுத்தும் ஒரு பசப்பு வேலை என அரசியல் ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

நஜீப்பின் ஆதரவாளர்கள், ‘போஸ்கூ’ என்னும் முழக்கத்துடன் கண்ணை மூடிக் கொண்டு நஜீப் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். இதை உணர்ந்ததாலோ என்னவோ, கட்சித் தலைமை நஜீப்பின் விடுதலைக்காக உண்மையில் காரியமாற்றுகிறதோ இல்லையோ; ஆனால், அதிகமாக பேசி வருகிறது.

6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கட்சிக்குக்குள் உள்ள நஜீப் ஆதரவாளர்களை தக்கவைக்கவும் அவர்களின் ஆதரவை தேர்தல் களத்தில் பயன்படுத்தவும் நினைக்கும் கட்சித் தலைமை கையறு நிலையில் இருப்பதையும் உணர முடிகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles