29.5 C
Kuala Lumpur
Thursday, July 2, 2026

Vetri

செவிலியரின் சீருடையில் பிரச்சினை எதுவுமில்லை

🔥 Views : 7
👁 Reading Now : 66

🔊To listen to this news in Tamil, Please select the text.

அரசு மருத்துவமனை செவிலியர்களின் சீருடையில் பிரச்சினை ஏதுமில்லை என்றும் அது சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலோடு வடிவமைக்கப்பட்டிருப்பதாக சுகாதாரா அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தாப்பா தெரிவித்தார்.
இதனை ஒரு பொருட்டாக விவாதிக்காமல் சுகாதாரத் துறை சார்ந்த பல விவகாரங்களில் பொதுமக்கள் கருத்துகளை வெளியிட வேண்டுமென டாக்டர் Zaliha Mustapha (ஸலிஹா முஸ்தாப்பா) கேட்டுக் கொண்டார்.
அண்மையில் இரு பாஸ் எம்பிக்கள் தாதியரின் சீருடையானது மலாய் மற்றும் ஷரியா வழிமுறைக்கு மாறாக இருப்பதாகக் குற்றம் சாட்டியதை அடுத்து, பல தரப்பனரும் அது பற்றிய கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மலேசிய தாதியர் சங்கம், கியூபெக்ஸ் ஆகியவை சீருடைகள் சேவைக்கு ஏற்ற வகையிலும் செளகரியத்தை வழங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles