29.5 C
Kuala Lumpur
Thursday, July 2, 2026

Vetri

குறிப்பிட்ட சிலரின் மீது மட்டும்நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது கிடையாது

🔥 Views : 7
👁 Reading Now : 36

🔊To listen to this news in Tamil, Please select the text.

விதிக்கு முரணாகத் தவறு செய்தோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மட்டுமே உத்தரவிட்டிருப்பதாகவும் சிலர் கூறுவது போல, குறிப்பிட்ட சில தரப்பாரின் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டது கிடையாது என்று கோத்தாபாரு டேவான் பெசார் பாலாய் இஸ்லாம் லுண்டாங்கில் கிளந்தான் அரசு ஊழியர்களுடனான சந்திப்புக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போது பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நாட்டில் நிலவி வரும் ஊழலை ஒழிக்கவும் பதவியில் இருப்போர் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்து குடும்பத்தினருக்கும் அணுக்கமானவர்- களுக்கும் அரசு குத்தகைகளை வழங்கி சுயலாபம் சம்பாதிப்பதைத் தடுக்க வேண்டியே மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்ததாக அவர் தெரிவித்தார்.
ஊழலை ஒழப்பதில் தாம் குறியாக இருப்பதாகவும் ஆனால், ஒருபோதும் தாம் யாரையும் பழி வாங்கவோ, நிந்திக்கவோ, சிறுமைப்படுத்தவோ எண்ணம் கொண்டிருக்க- வில்லை என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles