
🔊To listen to this news in Tamil, Please select the text.
சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் இன்னும் இரண்டு தொகுதிகளுக்கு மட்டுமே பக்காத்தான் ஹராப்பானுக்கும் தேசிய முன்னணிக்கும் இடையே தீர்வு காணப்படாமல் உள்ளது என்று மந்திரிபெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
அந்த இரண்டு தொகுதிகள் தொடர்பில் நம்பிக்கைக் கூட்டணி-தேசிய முன்னணி தலைவர் மன்றம் முடிவு செய்யும் எனவும் தற்போது 95 விழுக்காடு தொகுதிகளில் தொகுதி பங்கீடு குறித்து தீர்வு காணப்பட்டு விட்டதாக சிலாங்கூர் மாபெரும் வேலை வாய்ப்பு கண்காட்சியை தொடக்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இத்தகவலை வெளியிட்டார்
