27.6 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் சிறந்த கூட்டுறவு அமைப்பாக அரசு அறிவிப்பு!

🔥 Views : 11
👁 Reading Now : 44

-டான்ஸ்ரீ கே.ஆர். சோமா பெருமிதம்

🔊To listen to this news in Tamil, Please select the text.

நாட்டில் சிறந்த கூட்டுறவு அமைப்பாக தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தை அரசு அறிவித்துள்ளது என்று கூட்டுறவு சங்கத் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் இன்று தெரிவித்தார்.

கூட்டுறவு சங்கத்தின் 56-ஆவது பேராளர் மாநாடு இன்று ஜூன் 25, ஞாயிறு காலையில் தோட்ட மாளிகையில் நடைபெற்ற
போது, தலைமையுரை ஆற்றிய டான்ஸ்ரீ சோமா இந்தத் தகவலை வெளியிட்டார்.

முன்னதாக வரவேற்புரை ஆற்றிய அதன் நிருவாக இயக்குநரும் செயலாளருமான டத்தோ பா. சகாதேவன், கடந்த 2022-ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கத்திற்கு லாபகரமாக அமைந்ததாகக் குறிப்பிட்டார்.

அதைப்போல கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவி, சமூக நல உதவி, பிள்ளைகளின் கல்வி உதவி நிதி, கல்விக் கடன் நிதி, சிறந்த எஸ்.பி.எம். மற்றும் எஸ்.டி.பி.எம். மாணவர்களுக்கு சிறப்பு நிதி என்றெல்லாம் கூட்டுறவு சங்கத்தின் தொண்டறமும் மொழி-பண்பாட்டு ஊக்குவிப்பும் தொடரும் என்றார்.

குறிப்பாக, கடந்த 2022-ஆம் ஆண்டில் மட்டும் 14,533 பேரின் கண் அறுவை சிகிச்சைக்காக 29 மில்லியனை கூட்டுறவு சங்கம் வழங்கி உள்ளதாகவும் சகாதேவம் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles