25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

ரஷ்ய, ஆர்மீனிய, பெலாருஸ் நாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்

🔥 Views : 13
👁 Reading Now : 33

🔊To listen to this news in Tamil, Please select the text.

ரஷ்ய-யுக்ரேனியப்போர் 16 மாதங்களைக் கடந்துள்ள நிலையில், தற்பொழுது இதில் தலைகீழ் மாற்றமாக ரஷ்யாவின் கூலிப்படை, ரஷ்யாவிற்கே எதிராக திரும்பி உள்ளதால் அங்கு அரசியல் கொந்தளிப்பும் எந்த நேரத்தில் எந்த இடத்தில் என்ன நடக்குமோ என்ற பீதியும் நிச்சயமற்ற நிலையும் எழுந்துள்ளது.

இதனால் ரஷ்யா தவிர, ஆர்மினியா மற்றும் பெலாரஸ் நாடுகளில் உள்ள மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாக வும் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த மண்டலத்தைச் சேர்ந்த அனைத்து மலேசியர்களும் தங்கள் இருப்பிடம் தொடர்பு எண் குறித்த விவரத்தை கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்வழி தெரிவிக்கும்படி ரஷ்யாவில் உள்ள மலேசியத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. mwmoscow@kIn.gov.my and telephone numbers; +7 (495) 419 9898/99 or +7 (906) 746 1333 (duty officer).

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles