31.3 C
Kuala Lumpur
Sunday, September 20, 2026

Vetri

உயர்கல்வி மாணவர்களுக்கு தள்ளுபடி அட்டை:அமைச்சர் சலாஹுடின் அயூப் முயற்சி பயன்தருமா?

🔥 Views : 36
👁 Reading Now : 51

🔊To listen to this news in Tamil, Please select the text.

நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த உயர்கல்வி மாணவர்களின் ஏழ்மைச் சிக்கல்தீர, அவர்களுக்கு தள்ளுபடி அட்டையை வழங்குவதன்மூலம் சரிசெய்ய முடியுமா என்று கல்வியாளர்களும் சமூகவாதிகளும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

உள்நாட்டு வாணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சலாஹுடின் அயூப், உயர்க்கல்வி நிலையங்களில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு தள்ளுபடி அட்டை வழங்கப்படுவது குறித்து கடந்த சனிக்கிழமை பேசியிருந்தார்.

இதுகுறித்து கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். கல்விக் கட்டணம், போக்குவரத்து செலவு, விடுதிக் கட்டணம், உணவுக்கான செலவினத்தால் அழுத்தமான மனநிலைக்கு ஆளாகியுள்ள மாணவர்களுக்கு, தள்ளுபடி அட்டை வழங்குவதற்குப் பதிலாக, அவர்களுக்கான கல்விக் கட்டணத்தைக் குறைக்கலாம்; அல்லது இலவசக் கல்வி வழங்கலாம் என்று ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles