29 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பத்துமலை திருத்தலத்திற்கு வருகை!

🔊To listen to this news in Tamil, Please select the text.

மலேசியாவிற்கு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நான்கு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்த அவர், நேற்று புத்ரா ஜெயாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமைச் சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசானையும் சந்தித்த ராஜ்நாத், கோலாலம்பூர் இந்திய தூதரகத்தின் சார்பில் தூதர் பி.என். ரெட்டி நேற்றிரவு ஏற்பாடு செய்த விருந்துபசரிப்பிலும் கலந்து கொண்டார். மனித வள அமைச்சர் சிவகுமார், தொழில் முனைவர்-கூட்டுறவுத் துறை ணை அமைச்சர் க. சரசுவதி ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், இன்று பத்துமலை திருத்தலத்திற்கு வந்த அவருக்கு, தேவஸ்தானத்தின் சார்பில் அதன் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜாவும் அறங்காவலர் டத்தோ ந.சிவக்குமாரும் வரவேற்பும் மரியாதையும் வழங்கினர். தொடர்ந்து வழிபாட்டிலும் அவர் கலந்து கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles