
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஒன்றரை ஆண்டுகளாக யுக்ரெய்னுக்கு எதிராக ஆயுத நடவடிக்கை என்ற பெயரில் போர் நடத்திவரும் ரஷியா, யுக்ரெய்னின் அண்டை நாடான பெலாரஸில் அணு ஆயுதங்களை வகைதொகை இன்றி குவித்து வருகிறது.
500 கிலோமீட்டர் தூரம்வரை பாய்ந்து தாக்கக்கூடிய ஏவுகணைகள் மட்டுமல்ல; போர் விமானங்களையும் யுக்ரெய்ன் எல்லையை ஒட்டிய பெலாரஸ் நாட்டில் ரஷ்யா நிறுத்தி வைத்துள்ளது. போர் நடைபெறுவது ரஷ்யாவுக்கும் யுக்ரெய்னுக்கும் இடையில்; ஆனால், தொடர்பில்லாத மூன்றாம்தரப்பு நாட்டில் எதற்காக ஆணு ஆயுதம் உள்ளிட்ட போர் தளவாடங்களை ரஷ்யா சேமிக்கிறது என்பது குறித்து, உலக நாடுகள் ஐயம் தெரிவித்துள்ளன.
யுக்ரெய்னுடனான போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவராமல், அந்த நாட்டை மட்டுமல்லாமல், யுக்ரெய்னுக்கு ஆதரவான நேட்டோ நாடுகளையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சில நாடுகளையும் தொடர்ந்து பதற்றத்தில் வைத்திருக்கவும் தேவைப்பட்டால் அணு ஆயுதங்களையும் பயன்படுத்து-வதும் ரஷ்யாவின் குயுக்தி நகர்வாக இருக்கலாம்; இதனால், உலக நாடுகளிடையே ஐயம் பரவலாக எழுந்துள்ளது.
