
🔊To listen to this news in Tamil, Please select the text.
-நக்கீரன்
சிப்பாங், ஜூலை 20:
11-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, நாளை தொடங்க இருக்கும் நிலையில், இன்று ஜூலை 20 காலையில் கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலைய முனையம் 1-இல்(கே.எல்.ஐ.ஏ.-1) தமிழ் நாட்டு அரசின் சமூகநீதி கண்காணிப்புக் குழுத் தலைவரும் தமிழக பாடநூல் குழு உறுப்பினருமான பேராசிரியர் சுப. வீரபாண்டியன், சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருமான வேல் முருகன், தமிழார்வலர் இரா.அருள்மணி சாமுவேல், தமிழக வாழ்வுரிமைக் கட்சி இளைஞரணி பொறுப்பாளர் பகுத்தறிவாளன் ஆகியோர் வந்து சேர்ந்தனர்

இவர்களை TourLand Travel நிறுவனத்தின் சார்பில் மகாலெட்சுமி என்பவர் விடுதிக்கு அழைத்துச் சென்றார்.
கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்டோர் வருகை தந்திருப்பதாக விமான நிலையத்து வட்டாரத் தகவல் தெரிவித்தது.
