28.4 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

நக்கீரன் கோபால், பழ. கருப்பையா உள்ளிட்டோர் வருகை; பழைய கிள்ளான் சாலை Pearl International தங்கும் விடுதியில் தமிழர்க் கூட்டம்

🔊To listen to this news in Tamil, Please select the text.

11-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம், தமிழீழப் பகுதி, கனடா, ஆஸ்திரேலியாவில் இருந்தெல்லாம் நூற்றுக்கணக்கான பேராளர்கள் கடந்த மூன்று நாட்களாக கட்டம் கட்டமாக கோலாலம்பூருக்கு படையெடுத்து வருகின்றனர்

அவ்வாறு வருகின்ற அனைவரும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினரால் பழைய கிள்ளான் சாலை Pearl International தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால், இந்த விடுதியில் திரும்பும் திசையெங்கும் காணும் இடமெல்லாம் தலைவர்கள், பேராசிரியர்கள், ஊடக-அச்சகத் துறையினர், தமிழ் ஆர்வலர்கள் என தமிழர்க் கூட்டமாகத் தெரிகிறது

இந்தத் தமிழர் திருக்கூட்டத்தைக் காணும்போதில் உள்ளம் களிக்கிறது. குறிப்பாக, சமூக ஆர்வலரும் துப்பறி இதழாளருமான நக்கீரன் கோபால், பேச்சாளர்-நடிகர்-அரசியல், சமூகத் தலைவர்-சட்டமன்றமுன்னாள் உறுப்பினர் பழ.கருப்பையா, கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் சி.சித்ரா, அமெரிக்கப் பேராளர்களுக்கான ஒருங்கிணைப்பாளர் மகாலெட்சுமி, மதுரை இ.எம்.ஜி
யாதவா மகளிர்க் கல்லூரி விரிவுரையாளர் ஆதிலெட்சுமி உள்ளிட்டோரைச் சந்தித்தது இன்னும் இன்பமாக இருந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles