26.4 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

பெரிக்காத்தானுக்கு செல்வாக்கு இருந்தாலும் சிலாங்கூரை கைப்பற்றும் வாய்ப்பு இல்லை Ilham ஆய்வு மையம் தகவல்

🔥 Views : 5
👁 Reading Now : 37

🔊To listen to this news in Tamil, Please select the text.

 சிலாங்கூரில் பெரிக்காத்தான் நேசனல் தனது செல்வாக்கை விரிவுப்படுத்துக் கொண்டபோதிலும் பொருளாதார வளம் நிறைந்த அம்மாநிலத்தை கைப்பற்றும் வாய்ப்பு இல்லையென Ilham ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சிலாங்கூர் மட்டுமின்றி, நெகிரி செம்பிலான் மற்றும் பினாங்கு மாநிலத்தையும் பக்காத்தான் ஹராப்பான் – தேசிய முன்னணி கூட்டணி தற்கவைத்துக் கொள்ளும் என்றும் பாஸ் தலைமையிலான நிர்வாகத்திலுள்ள கிளந்தான், திரெங்கானு மற்றும் கெடா ஆகிய மாநிலங்களை பக்காத்தான் கூட்டணி மறந்துவிட வேண்டியதுதான் என Ilham ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெரிக்காத்தான் நேசனல் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்ட போதிலும் சிலாங்கூர் அதன் Votes Bank எனப்படும் வாக்குகள் வங்கி சுளையாக இருப்பதால் வாக்குகள் மாறிச் செல்லும் வாய்ப்பு மிகவும் குறைவு என கூறப்படுகிறது. பினாங்கில் மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக உள்ள Penaga, Pinang Tunggal, Permatang Berangan dan Sungai Dua ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி கை ஓங்கியிருக்கிறது. இதர தொகுதிகளில் பக்காத்தான் ஹராப்பான் – தேசிய முன்னணி வலுவான கோட்டையாக திகழ்வதாக Ilham ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles