
🔊To listen to this news in Tamil, Please select the text.
இம்மாதம் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆறு மாநில தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு முழுமையான ஆதரவை வழங்குதவற்கு ம.இ.கா. எடுத்திருக்கும் முடிவு வரவேற்கக்கூடியது என்பதோடு இந்திய சமூகத்தின் ஒற்றுமைக்கு வித்திடும் முடிவாக இருப்பதாக சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற தொகுதிக்கான பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.
ம.இ.கா.-வின் இந்த முடிவு நாட்டின் அரசியலிலும் புதிய பரிமானத்தை ஏற்படுத்தியுள்ளது என அவர் கூறினார். பக்காத்தான் ஹராப்பான் – தேசிய முன்னணி கூட்டணிக்கு ஆதரவு தருவது என்ற நிலைப்பாட்டை விக்னேஸ்வரன் எடுத்ததன் மூலம் சமூகத்தின் நலனுக்கு ம.இ.கா. முக்கியத்துவம் கொடுத்திருப்பதாக குணராஜ் தெரிவித்தார்.
அரசியல் கருத்து வேறுபாடுகளை மறந்து இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்காக ஒன்றினைந்து பாடுபட வேண்டும் என்ற உயரிய கருத்தை விக்னேஸ்வரன் கொண்டிருப்பது பாரட்டப்பட வேண்டிய ஒன்று என குணராஜ் கூறினார்.
ஒற்றுமைக்கு கை கொடுத்திருக்கும் ம.இ.கா தலைவரின் இந்த முயற்சி, இந்திய சமூகத்தின் குரல் ஓங்கி ஒலிப்பதற்கு மட்டுமின்றி அனைத்து நிலைகளிலும் இந்திய சமூகத்தின் நலன் பாதுகாக்கக்கப்டுவதற்கு பெரிதும் துணைபுரியும்.
கோத்தா ராஜா தொகுதி தலைவருடனும் தாம் பேச்சு நடத்தியதால் அனைவரும் ஒன்றாக இணைந்து பக்காத்தான் ஹராப்பான் – தேசிய முன்னணி வெற்றிக்காக பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்பும் ஏற்பட்டிருப்பதாக குணராஜ் கூறினார்.
