
🔊To listen to this news in Tamil, Please select the text.
மின்னல் பண்பலை வானொலி இன்னொரு பிரமாண்ட நிகழ்ச்சியை ரசிகர்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறது. பாடும் திறன் கொண்ட இளைஞர்களின் தேடலுக்கான மிகச் சிறந்த களமாக மின்னல் வானொலி திகழ்கிறது.
இவ்வாண்டு ‘BINTANG MINNAL-2023’ பாடும் திறன் கொண்டவர்-களுக்கான போட்டியில் 250துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் படைத்த காணொளிகளிலிருந்து 12 போட்டியாளர்கள் அரையிறுதி சுற்றுக்கு தேர்வாகி இருக்கின்றனர்.
- இராஜஸ்ரீ கோபி
- ஜீவா ஜெயகோபி
- நிஷா முரளிராவ்
- ஷ்ருதி கசவராஜன்
- பரத் நாயர் ஸ்ரீதரன்
- தர்ஷினி கலைச்செல்வன்
- சிவநேசன் யோகநாதன்
- இரஞ்சனா குணாளன்
- தேவதர்ஷினி பாலசுப்பிரமணியம்
- ஸ்வேதா நாயர் கிருஷ்ணகுமார்
- உன்னிதெய்வன் பாஸ்கரன்
- நிமலன் கங்காதரன்
ஆகிய பன்னிருவருக்கும் மின்னல் வானொலி வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறது.

இந்த 12 பேரும் கலந்துகொள்ளும் அரையிறுதிச் சுற்று நாளை, ஆகஸ்ட் 5-ஆம் நாள் அங்காசாபூரி, ஆர்.டி.எம்மில் காலை 10மணி அளவில் நடைபெறகிறது.
இந்நிகழ்ச்சியை மின்னலின் முகநூல் பக்கத்திலும், ‘TIK TOK’சமூக ஊடத்திலும் நேயர்கள் நேரலையாக காணலாம். மின்னலின் ஒலிபரப்பிலும் இந்நிகழ்ச்சி குறித்த அண்மைய நிலவரங்கள் வழங்கப்படும்.
வெற்றியை வசப்படுத்தி BINTANG MINNAL 2023இன் பிரமாண்ட இறுதி சுற்றுக்குள் கால் பதிக்கவிருக்கும் அந்த 6 போட்டியாளர்கள் யார்யார் என்பதை அறிய காத்திருப்போம் என்று இதன் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மின்னல் பண்பலை நிருவாகம் சார்பில் அறிவிப்பாளர் நளினி அச்சுதன் தெரிவித்துள்ளார்.
