25.3 C
Kuala Lumpur
Thursday, July 2, 2026

Vetri

கிள்ளானில் வெள்ள தடுப்பு நடவடிக்கை என்னவானது? எம்.பி கணபதி ராவ் கேள்வி

🔥 Views : 9
👁 Reading Now : 56

🔊To listen to this news in Tamil, Please select the text.

தமது கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியில் குறைந்த அளவிலேயே வெள்ள தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது குறித்து பக்காத்தான் ஹரப்பான் நாடாளுமன்ற உறுப்பினரான கணபதி ராவ் ஏமாற்றத்தைத் தெரிவித்துள்ளார். குழாய் பொருத்தப்பட்டிருப்பது மற்றும் கால்வாய்கள் சுத்தப்படுத்தியது போன்ற சிறிய அளவிலான பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். இதனால் கடுமையான மழை பெய்யும் காலத்தில் கிள்ளான் மக்கள் நிம்மதியிழந்து காணப்படுவதாக அவர் கூறினார். வெள்ள தடுப்பு நடவடிக்கைகைள் குறித்து அடிக்கடி அறிவிப்புக்களை நாங்கள் செவிமடுக்கிறோம். ஆனால் அதற்கான முன்னேற்றம் மிகவும மந்தமாக இருக்கிறது என கணபதி ராவ் நாடாளுமன்றத்தில் தமது ஏமாற்றத்தை தெரிவித்தார். வெள்ள தடுப்பு நடவடிக்கையில் நீண்ட கால திட்டம் தேவையென அவர் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles